காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய இந்த 4 சைவ உணவுகளை சாப்பிட்டு பாருங்க.!?
ஊட்டசத்து இல்லாத உணவுகளும், வாழ்க்கைமுறையும்
பொதுவாக நவீன காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, உடலில் ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளால் பலரும் அதிகமான நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் அதற்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகளை நம் உடல் காட்டிக் கொடுத்துவிடும். அந்த வகையில் வைட்டமின் பி12 குறைபாடு என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
வைட்டமின் பி12 குறைபாடு இருப்பவர்களுக்கு அதீத சோர்வு, இரத்த சோகை, நாக்கு மறத்து போதல், கால்களில் அதிக வலி, மனசோர்வு, நரம்புகளில் பாதிப்பு போன்ற பலவகையான பிரச்சனைகள் அறிகுறிகளாக இருக்கிறது. இந்த அறிகுறிகள் நம் உடலில் ஏற்படும் போது தேவையான அளவு வைட்டமின் பி12 நம் உடலுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தமாகும். எனவே வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
இதையும் படிங்க: ஒரே நாளில் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் அரிசி பொரி.! வேறு என்னென்ன நோய்களை தீரக்கும் தெரியுமா.!?
வைட்டமின்
பி12 சைவ உணவுகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்ஈஸ்ட் - ஒரு ஸ்பூன் ஈஸ்டில் 2.5 மைக்ரோ கிராம் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இதனை தயிர், முட்டை அல்லது ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடலாம்.
சோயா - சோயா பால், டோபூ போன்ற சோயா உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. ஒரு கப் சோயாபாலில் 1.5 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
தானியங்கள் - நிலக்கடலை, ஓட்ஸ், கோதுமை, பாதாம் போன்ற தானியங்களில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
தயிர்
- வைட்டமின் பி 12 சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் உணவில் தயிர் சேர்த்துக் கொள்ளும்போது வைட்டமின் பி12 கிடைக்கிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலே குறிப்பிட்ட பொருட்களை உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து நோய் நொடியின்றி வாழலாம்.
இதையும் படிங்க: 40 வயதை தாண்டி ஆண்கள் மாரடைப்பு வராமல் இருப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்.!