ஒரே நாளில் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் அரிசி பொரி.! வேறு என்னென்ன நோய்களை தீரக்கும் தெரியுமா.!?



Health benefits of eating puffed rice

அரிசி பொரியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக அரிசியை பொரியாக சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வருகிறது. இவ்வாறு பொரியாக சாப்பிடும்போது பல நோய்களை குணப்படுத்தும் என்று நம் முன்னோர்கள் நம்பி வந்தனர். அந்த வகையில் அரிசி பொரி உண்பதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Puffed rice

1. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தி ஒரே நாளில் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.
2. செரிமான பிரச்சனை இருப்பவர்கள் அரிசி பொரியை தினமும் காலை அல்லது இரவில் உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.
3. குறைந்த கலோரிகள் கொண்ட அரிசி பொரி உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
4. அரிசி பொரி பசியை கட்டுப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள இன்சுலின் சுரக்க உதவுகிறது.
5. இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துவதோடு, உடலில் ஏற்படும் வலிகளையும் சரி செய்கிறது.
6. சோடியம் குறைவாக உள்ளதால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் இதனை தினமும் உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.
7. வாய்புண், தொண்டை புண், வயிற்று புண் இருப்பவர்கள் அரிசி பொரியை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
8. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்தை பிரித்து நம் உடலுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது.
9. குறிப்பாக இதய நோய், மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய அரிசி பொரியை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: 40 வயதை தாண்டி ஆண்கள் மாரடைப்பு வராமல் இருப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்.!

இதையும் படிங்க: எச்சரிக்கை.! சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் உணவுகள் எது தெரியுமா.!?