மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடு துடைத்த மாப்பை எப்படி கிளீன் செய்வது என குழப்பமா.?! இதோ சூப்பர் டிப்ஸ்.!
நாம் அனைவரும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள அடிக்கடி வீட்டை துடைக்க வேண்டும். அதுவும், குழந்தைகள் மற்றும் வயதில் பெரியவர்கள் இருக்கும் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்ய ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் ஏதாவது ஒரு கிளினிங் லிக்யூட், சிறிது மஞ்சள், சிறிது கல் உப்பு, கிராம்பு சேர்த்து கரைத்து 'மாப்' கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும். இதனால், வீட்டில் கிருமி தங்காது.
மேலும், துடைத்த 'மாப்'-பை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம். நாம் யாருமே அதை சரியாக செய்வது இல்லை. இதனால், மாப் -ல் கிருமிகள் தங்கும். அதோடு, ஒரு விதமான பிசுப்பிசுப்பும், கருப்பு அச்சும் உண்டாகும். மேலும், அதன் ஆயுட்காலமும் குறையும். அதை எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவில் காண்போம்.
வீடு துடைக்கும் மாப்-பை சுத்தம் செய்யும் வழிமுறைகள்
முதலில் ஒரு பக்கெட்டில் வெந்நீர் நிரப்பி அதில் 1 அல்லது 2 எலுமிச்சைப் பழச்சாற்றை சேர்த்து அதில், கல் உப்பு கலந்து கரைத்து கொள்ளவும். பின்பு, மாப்பை அதில் அரை மணி நீரம் ஊற வைத்து அதை ஓடும் நீரில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் மாப்பின் அழுக்கு நீங்கி விடும். அதோடு, அதில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து புதிது போல மாற்றி விடும்.
இதையும் படிங்க: உயரத்தை அதிகரிக்கச் செய்யும்.. 5 உணவுகள்.. ஒரே மாதத்தில் கண்கூடாக வளர்ச்சியை காணலாம்.!
வினிகர் கொண்டு 'மாப்' சுத்தம் செய்யும் வழிமுறை
ஒரு பக்கெட் எடுத்துக்கொண்டு அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நிரப்பவும். பின்பு, அதில் போதுமான அளவு வினிகரை சேர்த்து கலந்து கொள்ளவும். இதில், அழுக்கான மாப்பை 5 அல்லது 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு அதை வேறு தண்ணீரில் சுத்தமாக அலச வேண்டும். இதனால், மாப்பில் தங்கியுள்ள எண்ணெய் பிசுப்பிசுப்பு நீங்கி புதிது போல் காணப்படும்.
சலவை சோப் கொண்டு மாப் சுத்தம் செய்ய வழி
முதலில் ஒரு பக்கெட்டில் தண்ணீரை நிரப்பிக் கொள்ளவும். பின்பு, அதில் 'டிஷ் சோப்' அல்லது 'சலவை சோப்' சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கரைசலில் மாப்பை 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்து அதை நல்ல தண்ணீரில் அலச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாப்பில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு அதில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும்.
மேலேக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வீடு துடைக்கும் மாப்பை சுத்தம் செய்யலாம். இதனால் 'மாப்' புதிது போல காணப்படுவதுடன் அதன் ஆயுட்காலமும் நீடிக்கும்.
இதையும் படிங்க: #பேச்சிலர்_ஸ்பெஷல் : 10 நிமிடத்தில் செய்து, 10 நாளுக்கு வைத்து சாப்பிடும் சூப்பரான தக்காளித் தொக்கு.!