பட்டனை திறந்துபோட்டு, படு பயங்கர கவர்ச்சி.. கருப்பன் பட நடிகையால், அதிர்ந்து போன இணையவாசிகள்.!
உங்கள் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா.? இதை ட்ரை பண்ணி பாருங்க.!?
குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் அதிகமாக ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை விரும்புகின்றனர். இவ்வாறு ஊட்டச்சத்து இல்லாத துரித உணவுகளை உண்ணும் போது உடலுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்படுகின்றனர். எனவே குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க இந்த கேழ்வரகு பாலை வாரத்திற்கு மூன்று முறை கொடுத்து பாருங்க. கேழ்வரகு பால் எவ்வாறு செய்யலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
கேழ்வரகு பால் செய்ய தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - கால் கிலோ
நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி, - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
கருப்பு எள் - 50 கிராம்
பாதாம் பருப்பு - 15
இதையும் படிங்க: இந்த சத்து உடலில் குறைந்தால் மன அழுத்தம் ஏற்படுமா.! உடனே மருத்துவரை பாருங்க.!?
செய்முறை
முதலில் ஒரு கடாயில் கருப்பு எள் சேர்த்து வாசனை வரும் வரை சிறிது வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் பாதாம் பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து காற்று போகாத பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளவும். இதனை இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நன்றாக கொதித்ததும் அதில் இரண்டு ஸ்பூன் கேழ்வரகு மாவு, இரண்டு ஸ்பூன் அரைத்து வைத்த கருப்பு எள் மற்றும் பாதாம் பருப்பு மாவு சேர்த்து கலந்து விடவும். மாவு நன்றாக வெந்ததும் இறுதியாக பால் மற்றும் நெய் கலந்து இரண்டு நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பின்னர் நன்றாக ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் எடை விரைவில் அதிகமாகுவதோடு, குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க இதை செய்து பாருங்க.!?