மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது புறம்போக்கு நிலம்; எங்களிடம் இருப்பதே உண்மையான அ.தி.மு.க: கோவை செல்வராஜ் அதிரடி..!
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கிவரும் அ.தி.மு.க மட்டுமே உண்மையான அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் என்று கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் இது குறித்து பேசியதாவது :-
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கிவரும் அ.தி.மு.க மட்டுமே உண்மையான அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல காட்சியளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நீதிமன்றங்களுக்கு சென்றாலும் கூட, தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்துள்ளது.
அ.தி.மு.க தற்போதும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் இல்லை. தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துகே உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விதண்டாவாதம் பேசி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.