#Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு தகவல்.!



  Minister PK Sekar Babu on Mud Threw Minister Ponmudi 

உள்நோக்கத்துடன் அமைச்சரின் மீது சேறு வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவலை சேகர்பாபு பகிர்ந்துள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் அமைச்சரின் மீது சேற்றை வீசியுள்ளனர். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் சேறு வீசி இருக்கின்றனர். பொதுமக்களுக்கும், சேறு வீசப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. 

அதிமுக ஆட்சியில் 250 பேர் பலி

சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, சொல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு 250 உயிர்கள் அதிமுக ஆட்சியில் பலியாகி இருந்தனர். தற்போது முன்னறிவிப்புடன் செயல்பட்டதால் உயிர்பலி இல்லை. தமிழ்நாடு அரசு வெள்ளம்-புயல் மழையை திறம்பட எதிர்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்படுகிறது. 

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு? வெளியான தகவல்.!

முன்னெச்சரிக்கை பணிகள்

சென்னையில் பெருமழை தொடங்கியதும் ஒரு மாதத்திற்கு முன்பே உரிய நடவடிக்கை தொடங்கியது. 8 ஆயிரம் தன்னார்வலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள் உடனுக்குடன் வரவரழைக்கப்பட்டு அரசு பணிகளை தீவிரப்படுத்தியது. அதன் மூலமாக சென்னையில் மழை பெய்த 12 மணிநேரத்தில் மக்களின் இயல்பு நிலை திரும்பியது.

மனசாட்சியோடு பேசுங்க

பழுதான வாகனத்திற்கு இழப்பீடு உட்பட பிற விஷயம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பார். பாதிக்கப்பட்ட கால்நடை, வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் வஞ்சக சூழ்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. அவர்கள் மனசாட்சியுடன் பேச வேண்டும். புயலின் தாக்கத்தை வானிலை ஆய்வு மையத்தால் அளவிட இயலவில்லை. இயற்கை அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை நிரூபணம் செய்துவிட்டது" என பேசினார்.

இதையும் படிங்க: திமுக இளைஞரணி பிரமுகர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட விவகாரம்; குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.!