Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
மக்களின் நிலைமைக்கு திமுக அரசே காரணம் - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்ககரை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, "தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் மழை பெய்துள்ளது. புயலின் தாக்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் 51 செமீ மழை பெய்துள்ளது. கனமழையால் ஊத்தங்கரை தாலுகா, போச்சம்பள்ளி தாலுகா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்குக
ஊத்தங்கரை நகரையொட்டிய ஏரியில், மழைநீர்வெள்ளம் உபரியாக வெளியேறி பேருந்து நிறுத்தத்தை சூறையாடியுள்ளது. இதனால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. மொத்தமாக 50 வாகனங்கள் பழத்தில் கிடக்கிறது. 50 வாகனத்தை சீர்படுத்த அதிக தொகை செலவு ஆகும். சபரிமலை சீசனில் வாகனங்கள் இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான நிவாரணத்தை திமுக அரசு வழங்க வேண்டும்.
இதையும் படிங்க: "நமக்கு எதுக்கு வம்பு... அப்புறம் எங்கள கட்சில இருந்து தூக்கிருவாரு இபிஎஸ்.." முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!
மாற்று இடம் கொடுக்க வேண்டும்
சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதிக பணத்தை செலவு செய்து வாகனத்தை வாங்கியுள்ளனர். அவர்களின் இழப்பு மிகப்பெரியது. இதனால் அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கரையோர பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
உறக்கத்தை தொலைத்த மக்கள்
சென்னை மக்கள் உறக்கம் தொலைத்த அரசு அதிமுக என முக ஸ்டாலின் விமர்சனம் முன்வைத்தார். அவர் கூறிய சிலமணிநேரத்திற்குள், அவர்களின் சரியான நடவடிக்கை இல்லாத காரணத்தால், விழுப்புரம் மக்கள் உறக்கத்தை தொலைத்துள்ளனர். இதற்கு திமுகவே பொறுப்பு" என பேசினார்.
இதையும் படிங்க: "வாய்ப்பில்ல ராஜா; தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியது அதிமுக.." எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி.!!