என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
"அண்ணாமலை பாஜகவின் சொத்து; அரசியல் கூட்டணி நாகரீகமாக இருக்க வேண்டும்..." திமுக கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி.!!

அதிமுக அழுத்தம் காரணமாக அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில் அண்ணாமலை குறித்து புதிய பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கும் கருத்துக்கள் தமிழக பாஜக அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பாஜக தலைவராக அண்ணாமலை
கடந்த 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் அண்ணாமலை பாஜகவின் தமிழ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவி காலத்தில் தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சியால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் அந்தக் கட்சி தனது வாக்கு வங்கியை அதிகரித்திருக்கிறது. மேலும் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் யாத்திரை கட்சித் தொண்டர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியது.
அண்ணாமலை பதவி நீக்கம்
இந்நிலையில் 2026 ஆம் வருட சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தமிழக பாஜக கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு அந்தக் கட்சியின் எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக அழுத்தம் காரணமாகவே அண்ணாமலை பதவி நீக்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கூறி வருகின்றன. இந்தக் கருத்துக்களுக்கு புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: "எந்த வேசத்தில் வந்தாலும் பாஜகவிற்கு தோல்விதான்..." காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.!!
அண்ணாமலை பாஜகவின் சொத்து
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் அண்ணாமலை பாஜகவின் சொத்து என தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழக பாஜகவிலிருந்து அண்ணாமலையை யாரும் ஒதுக்கிவிட முடியாது எனவும் கூறியிருக்கிறார். அரசியலில் கூட்டணி என்பது அவ்வப்போது மாறிவரும் ஒன்றுதான் என தெரிவித்திருக்கும் அவர், மாற்றங்கள் நாகரிகமான முறையில் இருக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின், உதயநிதிக்கு ஸ்கெட்ச் ரெடி... சீக்கிரமா ரெய்டு வரும்" அதிமுக எம்பி தம்பிதுரை அதிரடி பேச்சு.!!