"எந்த வேசத்தில் வந்தாலும் பாஜகவிற்கு தோல்விதான்..." காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.!!

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் மீண்டும் விரட்டியடிப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார். அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் மற்றும் வசந்தகுமார் பிறந்தநாள் விழா
ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மேலும் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்களின் பிறந்தநாள் விழாவும் சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆர்எஸ்எஸ் சட்டத்தை நிலைநாட்டும் பாஜக
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு திருத்தங்களாக கொண்டு வந்து ஆர்எஸ்எஸ் சட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. நாட்டில் ஒவ்வொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது என கூறினார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின், உதயநிதிக்கு ஸ்கெட்ச் ரெடி... சீக்கிரமா ரெய்டு வரும்" அதிமுக எம்பி தம்பிதுரை அதிரடி பேச்சு.!!
தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள்
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி எந்த கூட்டணியில் வந்தாலும் அவர்களை விரட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "கொஞ்சம் கீழ இருக்கீங்களா.." கட்டளையிட்ட இ.பி.எஸ்.!! கடுப்பான ஆர்.பி உதயகுமார்.!! அதிமுகவில் கோஷ்டி மோதல்.?