தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
"ஸ்டாலின், உதயநிதிக்கு ஸ்கெட்ச் ரெடி... சீக்கிரமா ரெய்டு வரும்" அதிமுக எம்பி தம்பிதுரை அதிரடி பேச்சு.!!

2026 ஆம் வருடத் தேர்தலுக்கு அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி உருவாகி இருக்கிறது. மேலும் இந்தக் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீடுகளில் மத்திய அரசு விரைவிலேயே ரெய்டு நடத்தும் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்திருக்கிறார்.
பேருந்து நிறுத்த திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. இதன் துவக்க விழாவில் அந்தத் தொகுதியின் அதிமுக எம்பி தம்பிதுரை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பிஜேபி கட்சியோடு கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
திமுக ஆட்சியின் ஊழல்
தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகையின் போது பேசியதையும் சுட்டிக்காட்டினார். டாஸ்மாக்கில் மட்டும் 39 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மக்களை வஞ்சிக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணியை ஆட்சியிலிருந்து நிச்சயமாக அகற்றும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "கொஞ்சம் கீழ இருக்கீங்களா.." கட்டளையிட்ட இ.பி.எஸ்.!! கடுப்பான ஆர்.பி உதயகுமார்.!! அதிமுகவில் கோஷ்டி மோதல்.?
ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு ஸ்கெட்ச் ரெடி
மேலும் தொடர்ந்து பேசிய அவர், விரைவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வீடுகளில் மத்திய அரசின் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும் எனவும் தெரிவித்திருக்கிறார். டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலைமை தமிழகத்தில் ஸ்டாலினுக்கும் ஏற்படும் எனவும் தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருவதாகவும் அவர் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "பயப்படாதீங்கண்ணே... இன்னும் 1 வருஷம் இருக்கு..." தமிழக முதல்வருக்கு புதிய பாஜக தலைவர் பதிலடி.!!