திருமாவளவனும் இப்படியா? ஹிந்தி திணிப்பு விஷயத்தில் இரட்டை வேடம்? அண்ணாமலை குற்றச்சாட்டு.!



BJP Annamalai on Thirumavalavan about Hindi Imposition 20 Feb 2025 

 

தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, மாநிலத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பல்வேறு வகையிலான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு விளக்கங்களையும் அளித்து வருகிறார். 

மேலும், திமுகவினர் நடத்தி வரும் சிபிஎஸ்இ உட்பட மத்திய அரசின் பள்ளிகளில் ஹிந்தி பயிற்றுவிக்கப்படும் நிலையில், மூன்றாவது மொழியாக எதாவது ஒரு மொழியை கூடுதலாக மாணவர்கள் பயிற்றுவிக்க மத்திய அரசு கொண்டு வரும் பொதுச்சட்டத்தை எதிர்ப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி வருகிறார். 

இதையும் படிங்க: #Breaking: தோல்வியடைந்த திமுக.. அன்பில் மகேஷுக்கு அமைச்சர் பொறுப்பு தேவையா? - அண்ணாமலை காட்டம்.!

அண்ணாமலை கண்டனம்

இந்நிலையில், திமுக கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக அங்கம் வகிக்கும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், புளூ ஸ்டார் செகண்டரி பள்ளியில், பள்ளியின் நிர்வாக குழு தலைவராக இருப்பதாகவும், அவரின் பள்ளியில் ஹிந்தி பயிற்றுவிக்கப்படும் நிலையில், மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு எதிராக கேள்வி எழுப்பியது ஏன்? என கேள்வி எழுப்பி இருக்கிறார். 

annamalai

இதுதொடர்பாக அவரின் ட்விட் பதிவில், "திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

தொடர்பு எதற்கு?

சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இதையும் படிங்க: கவுன்சிலர் கூட ஆக முடியாது - பாஜக அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு.!