"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"எங்களுக்கு பயமா.? பாஜக எப்போதும் தனி வழி.." அண்ணாமலை அதிரடி பேட்டி.!!
புதிய கட்சிகளை கண்டு பாஜகவிற்கு பயமில்லை என அந்த கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். லண்டனில் படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பிய அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது விஜய் கட்சி குறித்த தனது கருத்துக்களையும் பகிர்ந்திருக்கிறார்.
பாஜகவிற்கு பயமில்லை
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜக என்றுமே புதிய கட்சிகளுக்கு பயந்ததில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் நடிகர் விஜய்யும் திராவிட சித்தாந்தத்தையே பேசுவதால் திராவிட கட்சிகளின் வாக்கு பிரிவதாக தான் இதை பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சரித்திர தேர்தல்
2026 ஆம் வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக அமையும் என தெரிவித்த அண்ணாமலை, வரும் தேர்தலில் நிச்சயமாக பாஜக மாற்றங்களை கொண்டு வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்குமா.? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அண்ணன் சீமானின் பாதை வேறு பாஜகவின் பாதை வேறு என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பழைய உறவு விட்டு போகுமா.." பாஜக முக்கிய புள்ளியுடன் நெருக்கம் காட்டிய வேலுமணி.!! அதிமுக கோட்டையில் விரிசலா.?
ஆட்டம் ஆரம்பம்
அண்ணாமலை பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருந்து வந்தது. இந்நிலையில் அவர் படிப்பிற்காக லண்டன் சென்றதால் பாஜக செயல்பாடுகளில் வீரியம் குறைந்தது. இந்நிலையில் லண்டனிலிருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலை விமான நிலையத்திலிருந்து தனது வீரியமிக்க அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக பாஜக ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அண்ணாமலையின் ஆட்டம் ஆரம்பமானதாகவும் அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: அதிமுக கள ஆய்வில் அடிதடி.!! இபிஎஸ்- க்கு வந்த புது தலைவலி.!!