#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிமுக கள ஆய்வில் அடிதடி.!! இபிஎஸ்- க்கு வந்த புது தலைவலி.!!
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதன்படி மாவட்டங்கள் தோறும் கள ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் கும்பகோணம் பகுதிகளில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டங்களில் கோஷ்டி மோதல் ஏற்பட்ட நிகழ்வு அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுகவின் கள ஆய்வு கூட்டம்
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அதிமுக செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியை வலிமைப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கள ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தற்போது ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்டு வந்தது.
நெல்லையில் கோஷ்டி மோதல்
இந்நிலையில் கள ஆய்வு குழு நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நெல்லை மாவட்டத்திற்கான கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தின் போது கட்சி நிர்வாகிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களையும் மூத்த நிர்வாகிகள் வழங்கினர். இந்நிலையில் கூட்டத்தின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் தலையிட்டு தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அமைதிபடுத்தினர். இதனால் கூட்டம் நடைபெற்ற கல்யாண மண்டபம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதையும் படிங்க: "நமக்கு எதுக்கு வம்பு... அப்புறம் எங்கள கட்சில இருந்து தூக்கிருவாரு இபிஎஸ்.." முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!
ரத்தாகும் கள ஆய்வு கூட்டம்
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் கட்சியின் தலைமையை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. மேலும் கும்பகோணம் பகுதியிலும் இதே போன்று கோஷ்டி தகராறு ஏற்பட்டதால் கள ஆய்வு கூட்டங்களை கைவிடுமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள ஆய்வு குழுக்களுக்கு வாய்மொழி உத்தரவாக தெரிவித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: "வாய்ப்பில்ல ராஜா; தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியது அதிமுக.." எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி.!!