"பழைய உறவு விட்டு போகுமா.." பாஜக முக்கிய புள்ளியுடன் நெருக்கம் காட்டிய வேலுமணி.!! அதிமுக கோட்டையில் விரிசலா.?



sp-velumani-meets-bjp-mla-nainar-nagendran-sparks-tensi

பாரதிய ஜனதா கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறியிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பாஜகவின் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய புயலை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக - பாஜக மோதல்

2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல் வரை ஒரே அணியில் பயணித்த பாஜக மற்றும் அதிமுக, 2024 ஆம் வருட சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணியை முறித்துக் கொண்டது. மேலும் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பத்திரிக்கை பேட்டியில் பாரதிய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

tamilnadu

பாஜக எம்எல்ஏ-வை இல்லத்தில் சந்தித்த வேலுமணி

இந்நிலையில் அதிமுக கள ஆய்வு கூட்டத்திற்காக நெல்லை சென்றுள்ள முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான எஸ்.பி வேலுமணி, முன்னாள் அதிமுக பிரமுகரும் இந்நாள் பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்திருக்கிறார். மேலும் அவருடன் நெல்லை மாவட்டச் செயலாளரும் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து வேலுமணி பாஜகவில் இணைகிறாரா.? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.

இதையும் படிங்க: அதிமுக கள ஆய்வில் அடிதடி.!! இபிஎஸ்- க்கு வந்த புது தலைவலி.!!

மறுப்பு தெரிவித்த அதிமுக வட்டாரம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணி தனது இல்ல திருமண விழாவிற்கு பத்திரிக்கை வைப்பதற்காக நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு சென்றதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நமக்கு எதுக்கு வம்பு... அப்புறம் எங்கள கட்சில இருந்து தூக்கிருவாரு இபிஎஸ்.." முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!