என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
"பயப்படாதீங்கண்ணே... இன்னும் 1 வருஷம் இருக்கு..." தமிழக முதல்வருக்கு புதிய பாஜக தலைவர் பதிலடி.!!

அதிமுக மற்றும் பாஜகவின் வெற்றி கூட்டணியை கண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு இப்போதே பயம் வந்துவிட்டது என பாஜக எம்.எல்.ஏ-வும் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை மக்களுக்கு பொருந்தாத கூட்டணி என விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு தனது 'எக்ஸ்' வலைதளத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
அதிமுக - பாஜக கூட்டணி
தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இணைந்திருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி மலர்ந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வருகை புரிந்த அமித் ஷா தலைமையில் வர இருக்கின்ற 2026 ஆம் வருட சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்!
— Nainar Nagenthiran (@NainarBJP) April 13, 2025
ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!
ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் @mkstalin-இன் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை…
முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
அதிமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட கூட்டணி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்த முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு பொருந்தாத மற்றும் உதவாத கூட்டணி என தெரிவித்திருந்தார். அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்தக் கூட்டணியால் நன்மைகளை விட தீமைகளை மக்களுக்கு அதிகம் இருக்கும் எனவும் அவர் எனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க: "2026 தேர்தல் சூரசம்ஹாரம்; பாஜகவை கோவில் போல கட்டியிருக்கிறார் அண்ணாமலை" புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.!!
நயினார் நாகேந்திரன் பதிலடி
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கருத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் பயப்படாதீங்க முதல்வரே இன்னும் ஒரு வருஷம் இருக்கு. அதுவரை நன்றாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி திமுகவிற்கு பொருந்தாத கூட்டணி. இந்தக் கூட்டணி தான் உங்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணி எனவும் பதிவு செய்திருக்கிறார். மகேசன் தனது தீர்ப்பை மக்கள் மூலமாக உங்களுக்கு வழங்குவான். அதுவரை மக்களை உண்டு கொழுக்கும் உங்களது ஆட்டம் தொடரட்டும் எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: "வருங்கால துணை முதல்வரே..." காங்கிரஸ் போஸ்டரால் பர்பரப்பு.!! திமுக கூட்டணியில் விரிசலா.?