அத்தனை போட்டோவும் அம்புட்டு அழகு... லவ் டுடே ஹீரோயின் இவானாவா இது?
"வருங்கால துணை முதல்வரே..." காங்கிரஸ் போஸ்டரால் பர்பரப்பு.!! திமுக கூட்டணியில் விரிசலா.?

தமிழக காங்கிரசின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரசார் ஒட்டியிருக்கும் போஸ்டர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியான நிலையில் காங்கிரசாரின் போஸ்டர் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேயான கூட்டணி தொடர்ந்து வருகிறது. 2014, 2019 மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலிலும் 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் பெரும்பான்மையான முக்கிய கட்சியாக காங்கிரஸ் விளங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு திமுகவும் குறிப்பிட்ட அளவிலான தொகுதிகளை சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலிலும் ஒதுக்கி வருகிறது.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி சுமுகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் சென்னையில் ஒட்டி இருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஏ.வி.எம் ஷெரிஃப் பெயரில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை வருங்கால துணை முதல்வரே என்ற வாசகத்துடன் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: "இந்த அசிங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது..." அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி கருணாநிதி கண்டனம்.!!
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
இந்த போஸ்டர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டு ஆளும் திமுக அரசிற்கு அழுத்தம் கொடுக்கிறதா.? என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரால் திமுக மற்றும் காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "வாய்ப்பில்ல ராஜா... முடிந்தால் திமுக அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றட்டும்..." முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி.!!