"எனக்கு பாஜக நல்ல பதவி தரும்..." முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி நம்பிக்கை.!!



bjp-will-give-me-a-respectable-post-ex-cong-mla-vijayat

பாரதிய ஜனதா கட்சி விரைவிலேயே நல்ல பதவி வழங்கும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் தனக்கு ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த அவர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

tamilnadu

பாஜகவில் ஏமாற்றம்

பாரதிய ஜனதா கட்சி இவருக்கு உயரிய பதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏமாற்றமே பதிலாக கிடைத்தது. இதனால் பாஜகவின் மீது அதிருப்தியில் இருந்த விஜயதாரணி, அந்தக் கட்சியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்நிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவின் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் விஜயதாரணி.

இதையும் படிங்க: "ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு..." காங்கிரஸ் போஸ்டரால் பர்பரப்பு.!! திமுக கூட்டணியில் விரிசலா.?

பாஜகவின் மீது நம்பிக்கை

புதிய பாஜக தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பாஜக தலைமை தனக்கு விரைவில் பதவி வழங்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் நீண்ட கால அரசியல் அனுபவமுடைய நயினார் நாகேந்திரன் பாஜக கட்சியை சிறப்பாக வழி நடத்துவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "இந்த அசிங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது..." அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி கருணாநிதி கண்டனம்.!!