"கொஞ்சம் கீழ இருக்கீங்களா.." கட்டளையிட்ட இ.பி.எஸ்.!! கடுப்பான ஆர்.பி உதயகுமார்.!! அதிமுகவில் கோஷ்டி மோதல்.?



ex-minister-udhaya-kumar-upsets-with-edappadi-palanisam

2026 ஆம் வருட தேர்தலுக்கு அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இந்தக் கூட்டணி பற்றிய அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு அதிமுக கட்சியினரிடையே எதிர்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி

கடந்த வருடம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியுடனான உறவை அதிமுக முடித்துக் கொண்டதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேலும் இனி எப்போதும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார். இந்நிலையில் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டிருக்கிறது.

TN politics

முன்னாள் அமைச்சர் உதயகுமாரை ஒதுக்கும் இபிஎஸ்

அதிமுக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்ததில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் அதிமுக கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக விளங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை, இபிஎஸ் ஒதுக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் கூட்டணி பற்றிய அறிவிப்பின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி, கே.பி முனுசாமி மற்றும் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் இருந்தனர். அப்போது உதயகுமாரை மட்டும் மேடையிலிருந்து கீழே இறங்குமாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "பயப்படாதீங்கண்ணே... இன்னும் 1 வருஷம் இருக்கு..." தமிழக முதல்வருக்கு புதிய பாஜக தலைவர் பதிலடி.!!

உட்கட்சி பூசல்

மேலும் அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை எதிர்த்து எடப்பாடிக்கு பக்க பலமாக இருந்தவர் ஆர்.பி உதயகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்களது கட்சியில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் பாரபட்சம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேடையில் இருந்து கீழிறங்க சொன்னதால் அதிருப்தியில் இருந்த உதயகுமார் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடைபெற்ற விருந்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிமுக கட்சியில் பூசல் ஏற்பட்டிருப்பது உறுதி எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் எடப்பாடி பெயரை போடாமல் போஸ்டர் அடித்திருப்பதும் சர்ச்சையை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "2026 தேர்தல் சூரசம்ஹாரம்; பாஜகவை கோவில் போல கட்டியிருக்கிறார் அண்ணாமலை" புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.!!