"வாய்ப்பில்ல ராஜா... முடிந்தால் திமுக அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றட்டும்..." முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி.!!

2026 ஆம் வருட தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. நீட் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்ததை தொடர்ந்து ஆளும் திமுக கூட்டணியின் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தை தமிழக எதிர்க்கட்சியான அதிமுக நிராகரித்தது. மேலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்த முதல்வர் ஸ்டாலின் அதிமுக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருப்பதன் மூலம் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கிறது என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்திருக்கிறார்.
நகைச்சுவை தீர்மானங்கள்
முதல்வருக்கு தனது 'எக்ஸ்' சமூக வலைதளம் மூலம் பதிலடி கொடுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் கொண்டுவரும் தீர்மானங்கள் எல்லாம் திரைப்படங்களில் வரும் காமெடிகள் போல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதையும் தனது கண்டன பதிவில் மேற்கோள் காட்டி இருக்கிறார். திமுகவின் கடந்த நான்காண்டு ஆட்சியில் நல்ல திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 11, 2025
ஒரு மக்கள் நலத்திட்டத்தையாவது காட்ட முடியுமா
திமுக அரசு தனது ஆட்சி காலத்தில் கொண்டு வந்த ஒரு நலத்திட்ட உதவிகளையாவது மேற்கோள் காட்ட முடியுமா.? எனவும் தனது பதிவில் கேள்வி எழுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை போல எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி மக்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் அவர் பதிவு செய்துள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும் போது தான் காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டிய அவர் காங்கிரசுக்கு எதிராக திமுக தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: "சொல்லி அடிக்கும் கில்லி.." முதல்வரின் அடுத்த கட்ட நகர்வுகள்.!! கலக்கத்தில் ஆளுநர் மாளிகை.!!
முடிந்தால் தீர்மானம் கொண்டு வரட்டும்
தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கக்கூடிய காவிரி நதிநீர் பிரச்சனையை தீர்க்க முதல்வர் ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மக்களை வஞ்சிக்கும் மேகதாது அணை மற்றும் காவிரி பிரச்சனைக்கு எதிராக தங்களது கூட்டணி கட்சியான காங்கிரஸ் அரசிற்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராகவும் தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசிற்கு தைரியம் இருக்கிறதா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தப் பிரச்சனைகளுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருப்பது முதல்வரின் எஜமானர்களுக்கான விசுவாசம் எனவும் தனது பதிலடியில் தெரிவித்திருக்கிறார் இபிஎஸ்.
இதையும் படிங்க: #Breaking: தமிழ்நாடு முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து; உபி முதல்வருக்கு பதிலடி கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்.! என்ன சொன்னார் தெரியுமா?