"மக்கள நெனச்சா வேதனையா இருக்கு: திமுக கனவு பலிக்காது.." செல்லூர் ராஜு பேட்டி.!!



dmk-dream-never-become-true-people-are-pitty-ex-ministe

2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியிருப்பது இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்திருக்கிறார்.

அதிமுக மருத்துவ முகாம்

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக ஆட்சியில் மக்கள் வஞ்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கூட ஒழுங்காக வழங்கப்படாமல் ஆட்சி நடைபெறுகிறது என கண்டித்திருக்கிறார்.

tamilnadu

இந்த வருடத்தின் மிகப்பெரிய ஜோக்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறியிருப்பது இந்த வருடத்தின் மிகப்பெரிய ஜோக் என விமர்சனம் செய்துள்ளார். கள நிலவரம் தெரியாமல் திமுகவினர் இவ்வாறு கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புயல் வெள்ள நிவாரணங்களை வழங்காமல் திமுக அரசு போட்டோ சூட் நடத்தி வருவதாகவும் கண்டித்துள்ளார்.

இதையும் படிங்க: "எங்களுக்கு பயமா.? பாஜக எப்போதும் தனி வழி.." அண்ணாமலை அதிரடி பேட்டி.!!

மனவேதனையாக இருக்கிறது

தற்போது ஏற்பட்டிருக்கும் புயல்களை விட அதிமுக ஆட்சியில் கடுமையான புயல் சேதங்களை தமிழகம் சந்தித்தது. ஆனால் அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு அந்த சூழ்நிலையை மிகச் சிறப்பாக கையாண்டது என தெரிவித்தார். மேலும் தற்போது மக்கள் படும் கஷ்டங்களை பார்ப்பதற்கு மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என கூறிய செல்லூர் ராஜு, உண்மையிலேயே திமுக அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்று என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: "பழைய உறவு விட்டு போகுமா.." பாஜக முக்கிய புள்ளியுடன் நெருக்கம் காட்டிய வேலுமணி.!! அதிமுக கோட்டையில் விரிசலா.?