அனுதாபிக்கும் - அமைச்சருக்கும் தொடர்பு என்ன? அருகதை இல்லை உங்களுக்கு - வானதி ஸ்ரீனிவாசன் ஆவேசம்.!



  BJP MLA Vanathi Srinivasan on Anna University Case 08 Jan 2025 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வையை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கி இருந்தன. மேலும், அவையில் விவாதமும் நடைபெறுகிறது.

இதனிடையே, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு அதிமுக, பாஜக, பாமக, நாதக நிர்வாகிகள் போராடியபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதம் நடந்து வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு, தமிழ்நாடு முதல்வரும் பதில் வழங்கினார்.

tamilnadu politics

பாஜக எம்.எல்.ஏ பேச்சு

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், "பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து பேசி, குறிப்பட்ட அண்ணா பல்கலை., வழக்கில் நடவடிக்கை எடுப்போம். மகளிருக்கு உரிமைத்தொகை அரசு கொடுக்கிறது என கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடக்கிறது. 

இதையும் படிங்க: "அந்த சார் ஆளுநராக இருந்தாலும்.," - கொங்கு ஈஸ்வரன் பரபரப்பு பேச்சு.!

பாதிக்கப்படும் பெண்களுக்கு குரல் கொடுப்பது அரசியல் என்றால், அதனை பாஜக செய்யும். அரசியல் செய்ய வேண்டும் என கூறுவதற்கு எந்த அருகதையும் இல்லை. நிர்பயா பெண்கள் பாதுகாப்பு நிதியை தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும். சாதாரண மனிதரால், திமுக அனுதாபியால் அமைச்சருடன் நெருங்கி புகைப்படம் எடுக்க இயலுமா?" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "ஆளுநரே பொறுப்பு" - மாணவி பலாத்காரம் விவகாரம்; வேல்முருகன், மதிமுக பாய்ச்சல்.!