"அந்த சார் ஆளுநராக இருந்தாலும்.," - கொங்கு ஈஸ்வரன் பரபரப்பு பேச்சு.!



  Kongu Eswaran Speech about Anna University 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வையை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கி இருக்கிறது. மேலும், அவையில் விவாதமும் நடைபெறுகிறது.

இதனிடையே, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு அதிமுக, பாஜக, பாமக, நாதக நிர்வாகிகள் போராடியபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதம் நடந்து வருகிறது.

Anna university

கொங்கு ஈஸ்வரன்

அவையில் பேசிய கொங்கு மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஈஸ்வரன், "அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முழுமையான விசாரணை வேண்டும். ஆளுநர் இந்த விஷயம் குறித்து வாய் திறக்காதது ஏன்?. பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாததன் காரணமாக முக்கிய முடிவுகள் எடுக்க இயலவில்லை. யார் அந்த சார் என கேட்டால், அந்த சார் யாராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை., போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவாதம்.. ஜி.கே மணிக்கு முதல்வர் பதில்.!

இதையும் படிங்க: "தப்பு இருக்குது, பயம் இருக்குது" - எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்.!