3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
"வாய்ப்பில்ல ராஜா; தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியது அதிமுக.." எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி.!!
2026 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி முறிவு
முன்னாள் முதல்வரான ஜெயலலிதா 2016 இல் மறைந்த பின்பு பாஜக மற்றும் அதிமுக இடையேயான உறவு வலுவானது. இதனைத் தொடர்ந்து 2019 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில், பாஜக மற்றும் அதிமுக ஒரே கூட்டணியில் போட்டியிட்டன. இந்த 2 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதாக அதிமுக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் வருட தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணி எதிர்கொண்டது.
பாஜகவிற்கு நோ
இந்நிலையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்து 2026 ஆம் வருட சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவும் கூட்டணியில் இடம் பெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை என தெரிவித்தார். மேலும் அதிமுக கட்சி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று மீடியாவில் வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக கண்ணில் தோல்வி பயம்; இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி.." டாக்டர் ராமதாஸ் அறிக்கை.!!
தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியது அதிமுக
தமிழக மக்கள் மனங்களில் என்றுமே நீங்காத கட்சியாக அதிமுக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியின் போது மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களும் எனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களும் தமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக ஆக்கியிருக்கிறது. எனவே எப்போதும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டில் பாஜக தவிர திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் உள்ள எல்லா கட்சிகளுடனும் கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "பகையை மறந்து இணைவோம்..."மீண்டும் இணைகிறதா அதிமுக - பாஜக கூட்டணி.? தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி.!!