"அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" - தனக்கு எதிரான தீர்ப்பு விவகாரத்தில் எச்.ராஜா பரபரப்பு பேட்டி.!



H Raja on Chennai HC Judgement Against Him 

பெரியாருக்கு எதிரான சர்ச்சை கருத்து, திமுக எம்.பி கனிமொழி தொடர்பாக பேசியது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதன் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு

வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு வெளியாகிய நிலையில், இரண்டு வழக்கிலும் எச்.ராஜா குற்றவாளி என கூறி, அவருக்கு தலா 6 மாதங்கள் என 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு? வெளியான தகவல்.!

இந்த உத்தரவு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஜாமின் பெற எதுவாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

எச்.ராஜா காட்டமான பேட்டி

அவர் பேசுகையில், "அரசியல் ரீதியாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 31ம் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய அவகாசம் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டப்போராட்டத்தை மேற்கொள்வார்கள். திராவிடயன் ஸ்டார்க் ஆட்களுக்கு எதிராக நடவடிக்கை தொடரும். நான் 60 ஆண்டுகளாக சித்தாந்தத்திற்காக போராடுகிறேன். அந்த சித்தாந்தத்திற்கு எதிராக பிரச்சனை வரும்போது, அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்" என பேசினார்.

இதையும் படிங்க: "எங்களுக்கு பயமா.? பாஜக எப்போதும் தனி வழி.." அண்ணாமலை அதிரடி பேட்டி.!!