வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
யுட்யூபர் இர்ஃபான் திமுக ஆதரவாளரா.? அவர் வெளியிட்ட வீடியோ வைரல்.!
ப்ரோமோ வீடியோ
'எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது. நான் அரசியல் கட்சியை சேர்ந்தவன் இல்லை.' என பிரபல யூட்யூபரான இர்பான் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், "என்னை சிலர் கார்னர் செய்து பேசுவது வேதனையாக உள்ளது. பிரமோஷனுக்காக தான் உதயநிதியுடன் இருக்கும் வீடியோவை நான் வெளியிட்டேன். அதற்காக அவர் என்னை ஆதரிக்க முடியுமா?
நான் தனியானவன்
அரசும், நீதித்துறையும் வெவ்வேறு. அவர்கள் எப்படி என்னை காப்பாற்றுவார்கள்? நடந்த சம்பவங்கள் என் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. நான் தனிமையாக இருப்பதாகத்தான் உணர்கிறேன். எப்போதும் எனக்கு நடக்கும் பிரச்சனைகளை தனியாக தான் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். என்னை யார் யாரோ திட்டுகின்றனர். இதனால், எனக்கு என்று யாருமே இல்லையா? என்ற மனவேதனை தோன்றுகிறது." என தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: "இதுக்கு தான் ஆண்ட பரம்பரைன்னு சொன்னேன்." அமைச்சர் மூர்த்தி பரபரப்பு.!
சர்ச்சை வீடியோக்கள்
சில நாட்களுக்கு முன்பு இர்பான் கர்ப்பமான தன் மனைவியுடன் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் விழா ஒன்றை நடத்தி, சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். நம் நாட்டு சட்டப்படி இது தவறு. எனவே, சுகாதாரத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் மன்னிப்பு கேட்டார். மேலும், மனைவி பிரசவிக்கும் நேரத்தில் இர்பான் தொப்புள் கொடியை அறுப்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் .இதுவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் மா சுப்பிரமணியன் இது ஒன்றும் கொலை குற்றம் இல்லை எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எதற்காக விளக்கம்?
எனவே இர்பான் திமுகவைச் சேர்ந்தவர் என்றும், அதனால், தான் அவருக்கு திமுக அரசு ஆதரவு அளிக்கிறது என்றும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால்தான் இர்பான் தற்போது இப்படி விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: நீங்கள் கொடுக்குற ரூ.1000 யாருக்கு வேணும்.. இதுதான் எங்களுக்கு வேண்டும்? - சௌமியா அன்புமணி ஆவேசம்., கைது.!