வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
"இதுக்கு தான் ஆண்ட பரம்பரைன்னு சொன்னேன்." அமைச்சர் மூர்த்தி பரபரப்பு.!
ஆண்ட பரம்பரை சர்ச்சை
தமிழகத்தின் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருப்பவர் மூர்த்தி. சில மாதங்களுக்கு முன் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்." என தெரிவித்து இருந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
எடிட்டிங் வீடியோ
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் மூர்த்தி பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த விளக்கத்தில், "நான் ஒரு தமிழக அமைச்சர் நான் அனைத்து மக்களுக்கும் பொதுவான நபர். எனது வீடியோவை யாரோ வேண்டும் என்றே இப்படி எடிட் செய்து வெளியிட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: நீங்கள் கொடுக்குற ரூ.1000 யாருக்கு வேணும்.. இதுதான் எங்களுக்கு வேண்டும்? - சௌமியா அன்புமணி ஆவேசம்., கைது.!
நிகழ்ச்சியில் இது தான் நடந்தது
அன்று நிகழ்ச்சியில் நான் பேசிய போது உண்மையில் என்ன கூறினேன் என்றால், நீங்கள் பின்தங்கி இருக்கிறீர்கள். படித்து அரசு பதவிக்கு வரும்போது அனைத்து சமுதாய மக்களையும் அனுசரித்து நடக்க வேண்டும்." என்று கூறினேன். வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு இதுபோன்ற செய்திகளை பரப்பனும்.
சோழர்களின் ஆட்சி
ஆண்ட பரம்பரை என்ற வார்த்தையை நான் கூறியதற்கு, ராஜராஜ சோழன் போன்ற சோழ மன்னர்களின் ஆட்சி முறையை குறிப்பிட்டு பேச விரும்பினேன். அதுதான் காரணம். இது ஒன்றும் இன்று, நேற்று நடந்த சம்பவம் அல்ல. சில மாதங்களுக்கு முன்பே நடந்த சம்பவம். அதை இப்படி தவறாக எடிட் செய்து வெளியிட்டு இருக்கின்றனர். இது நிச்சயம் கண்டிக்கத்தக்க விஷயம்." என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: யார் அந்த சார்? - உரிய விசாரணை நடத்த திருமாவளவன் கோரிக்கை.!