நீங்கள் கொடுக்குற ரூ.1000 யாருக்கு வேணும்.. இதுதான் எங்களுக்கு வேண்டும்? - சௌமியா அன்புமணி ஆவேசம்., கைது.!



sowmiya-anbumani-on-anna-university-case

அரசு கொடுக்கும் ரூ.1000 வேண்டாம், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தமிழ்நாடு அரசுக்கு எதிராக சௌமியா அன்புமணி குரல் எழுப்பினார்.

சென்னை அண்ணா பல்கலை.,யில் பயின்று வந்த 19 வயது கல்லூரி மாணவி, சாலையோர பிரியாணி கடை உரிமையாளர் & 15 நிலுவை வழக்கை கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில், ஞானசேகரன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யும் முன், செல்போனில் சார் என அழைத்து ஒருவரிடம் பேசியதாகவும் தெரியவருகிறது. இதனால் ஞானசேகரனைத் தொடர்ந்து, அந்த சாரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து இருக்கிறது.

இதையும் படிங்க: இது ஆண்ட பரம்பரை - திமுக அமைச்சர் மூர்த்தி பேச்சு.!

அரசியல் கட்சிகள் போராட்டம்

இந்த விசயத்திற்கு நீதி வேண்டும் என அதிமுக, பாஜக, நாதக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து கிண்டி அண்ணா பல்கலை., வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தது.

tamilnadu politics

ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்து, அரசியல் கட்சியினரை கைது செய்து மாலையில் விடுவித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிவேண்டும், சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீர்குலைந்துவிட்டது என அரசுக்கு எதிரான வாதம் முன்வைக்கப்படுகிறது.

சௌமியா அன்புமணி ஆவேசம்

இதனிடையே, இன்று அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்த வந்த பாமகவினர் கைது செய்யப்பட்டனர். பாமக மகளிரணி சார்பில் போராட்டத்தை தலைமையேற்று நடத்த வந்த சௌமியா அன்புமணி, போராட்ட களத்திற்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டார்.

கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சௌமியா அன்புமணி பேசுகையில், "இன்னும் எத்தனை பெண்களை அரசு பழிவாங்க போகிறது?. போராட்டம் நடத்துபவர்களை இவ்வுளவு காவல்துறையோ? குற்றவாளியை கைது செய்ய இவ்வுளவு காவல்துறை சென்றதா? நீங்கள் மாதம் கொடுக்கும் ரூ.1000 யாருக்கு வேண்டும்? பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" என உரத்த குரலில் ஆவேசமாக கூறினார்.

இதையும் படிங்க: "நான் உயிருடன் இருக்கும் வரை விடமாட்டேன்" - அண்ணாமலைக்கு எதிராக பொங்கிய வைகோ.!