மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் - மாணிக்கம் தாகூர்!
ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்றால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த 2 ஆண்டுகளில் திறக்கப்படும் என்று விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகாவும், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து நட்சத்திர தொகுதியாக மாறியுள்ள விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவரையும் நட்சத்திர வேட்பாளர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்று சொல்லலாம். சினிமாவை மக்கள் ரசிப்பார்கள், ஆனால் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொகுதியை பொருத்தவரை பல நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விருதுநகர் தொகுதிக்கு மேலும் பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி பிரதமரானால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அடுத்த 2 ஆண்டுகளில் திறக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.