#JustIN: திமுக போராட்டத்திற்கு அனுமதி எப்படி கொடுக்கப்பட்டது? - நீதிமன்றத்தில் பாமக முறையீடு.!



  PMK Appeal on High Court about DMK Protest Against TN Governor 

2025 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவுபெற்றதும், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். இதனால் ஆளுநர் உரை சபாநாயகரால் வாசிக்கப்பட்டு, ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தேசிய கீதம் விவகாரம்

இந்நிலையில், நேற்று ஆளுநர் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தது. மேலும், ஆளுநர் பேசும்போது அதிமுக, காங்கிரஸ் உட்பட கட்சிகள், அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் எதிர்ப்பு குரல் எழுப்பின. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதே மரபு, ஆளுநர் வேண்டும் என்றே தேசியகீதத்தை தமிழ்நாடு அரசு அவமதித்ததாக கூறுகிறார். இது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீங்கள் கொடுக்குற ரூ.1000 யாருக்கு வேணும்.. இதுதான் எங்களுக்கு வேண்டும்? - சௌமியா அன்புமணி ஆவேசம்., கைது.!

திமுக ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை, பனகல் பகுதியில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ் பாரதி, கலாநிதி மாறன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை கண்டிப்பதாகவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றன. ஆளுநருக்கு எதிரான கோஷங்கள் அங்கு எழுப்பப்பட்டன.

pmk

பாமக வழக்கறிஞர் முறையீடு

இந்நிலையில், ஆளுநரை கண்டித்து ஆளும் கட்சி நடத்தும் போராட்டத்திற்கு, ஒரே நாளில் காவல்துறை எப்படி அனுமதி வழங்கியது என கேள்வி எழுப்பியுள்ள பாமக வழக்கறிஞர் பாலு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அமர்வில் முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, நாளை மனுதாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும் கூறி இருக்கிறார். 

முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், பாமக சார்பில் அண்ணா பல்கலை., மாணவிக்கு நீதி வேண்டி போராட அனுமதி கேட்டபோது காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றமும் அண்ணா பல்கலை விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் வீணான சுய இலாபத்திற்கு அரசியல் செய்கின்றன. நாம் அனைவரும் இந்த விசயத்திற்கு வெட்கப்பட வேண்டும் என கண்டித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #Breaking: ஆளுநருக்கும் - விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? - கனிமொழி கடும் தாக்கு.!