#Breaking: ஆளுநருக்கும் - விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? - கனிமொழி கடும் தாக்கு.!



 DMK Kanimozhi Latest Press Meet 07 January 2025 

ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை, பனகல் பகுதியில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ் பாரதி, கலாநிதி மாறன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை கண்டிப்பதாகவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றன. ஆளுநருக்கு எதிரான கோஷங்கள் அங்கு எழுப்பப்பட்டன.

இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி பேசுகையில், "உங்களுக்கும், நாட்டின் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?. தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ பேர் விடுதலைக்காக போராடி, நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தனர். நீங்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து வெளியே ஓடிவந்தவர்கள். உங்களுக்கும், நாட்டுக்கும், உரிமைக்கும் என்ன சம்பந்தம்?. இந்தியாவிலேயே அதிக போருக்கு நிதிதிரட்டி தந்தவர் கலைஞர். 

dmk

ஆர்.என் ரவியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்

தேசத்தை, தேசியகீதத்தை காப்பாற்ற உங்களை விட முதல்வருக்கு அதிகம் தெரியும். இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற, தேசிய தலைவராக முதல்வர் விஸ்வரூபம் எடுத்துள்ளார். தொடக்கப்பள்ளி நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த வேலை வேண்டாம். அனைத்து மாநிலத்திலும் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: தேசிய கீதம் பாடுவதில் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? - பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி.!

பாஜகவை தமிழ்நாட்டில் ஒரு வாக்குக்கூட பெறாது. மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். ஆர்.என் ரவி இருக்கும் வரை, மு.க ஸ்டாலினின் புகழ் ஓங்கும். யாரை நம்பி தமிழ்நாடு வர வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள், அது திமுக தலைவர் மட்டுமே" என தெரிவிக்கப்பட்டுளள்து.

இதையும் படிங்க: "தப்பு இருக்குது, பயம் இருக்குது" - எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்.!