கனிமவளக்கொல்லையை எதிர்த்த அதிமுக நிர்வாகி கொலை.. இறுதியாக கொடுத்த பேட்டி.. என்ன சொன்னார் தெரியுமா?



  Pudukkottai AIADMK SUpporter Kills Bay Goons 

அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், புதிய திருப்பம் ஏற்பட்டு அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், அதிமுக ஒன்றிய பொறுப்பாளர் ஜகவர் அலி, நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சமூக ஆர்வலரான அலி, குவாரிக்கு எதிராக வழக்குத்தொடுத்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்து, அதிகாரிகளால் குவாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க: கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.! 

அரசியல்கட்சித் தலைவர்கள் கண்டனம்

ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, ஜெபகர் அலி கடந்த ஜன.13 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குவாரி விவகாரம் தொடர்பாக புகார் அளித்து பேசிய காணொளி வைரலாகி வருகிறது.

மரணத்திற்கு முன் பேட்டியில் கூறியுள்ளது என்ன?

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், திருமயம் பகுதியில் ஆர்.ஆர் குரூப்ஸ் நிறுவனம், 70 ஆயிரம் டாரஸ் லாரிகள் கனிமங்களை கொள்ளையடித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் மனு கொடுத்த செய்தியை கசியவிட்டதன் காரணமாக, திருடி வைத்துள்ள சக்கைகளை அவர்கள் குவாரிக்கே கொண்டு செல்கிறார்கள். 

அதிகாரிகள் ஒருவாரம், பத்துநாள் பொறுத்துக்கொள்ளுங்கள் என கூறுகிறார்கள். நாங்கள் நேரடியாக சென்றால் பயங்கர ஆயுதத்துடன் அடியாட்கள் சுற்றி வருகிறார்கள். நாங்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்" என பேசி இருக்கிறார். இதனிடையே தான் கொலை சம்பவம் நடந்துள்ளது. 

ஜெபகர் அலி இறுதியாக தெரிவித்த பேட்டி

இதையும் படிங்க: #JustIN: திமுகவில் இணைய காரணம் என்ன? - சத்யராஜ் மகள் சொன்ன அந்த முக்கிய விஷயங்கள்.. அசத்திடீங்க போங்க.!