இது ஆண்ட பரம்பரை - திமுக அமைச்சர் மூர்த்தி பேச்சு.!



DMK Minister Moorthy about Caste Speech

சுதந்திர போராட்டத்தில் முன்னின்று 10 ஆயிரம் பேரை இழந்தது இந்த சமுதாயம், நாம் ஆண்ட பரம்பரை, அதனை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என அமைச்சர் பேசினார்.

தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்டத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "இது ஆண்ட பரம்பரை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மறைக்கப்பட்ட வரலாறு

பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. 4 பேர், 2 பேர் இறந்தார்கள் என இன்று பெரிய பிரச்சனை செய்கிறார்கள். இந்த சமுதாயம் சுதந்திரப்போராட்டத்தின் போது 5 ஆயிரம், 10 ஆயிரம் பேரை இழந்து இருக்கிறது. இதனை நீங்கள் மறக்கக்கூடாது. படிப்பறிவில் நாம் பின்தங்கிய காரணத்தால், நமது வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நான் உயிருடன் இருக்கும் வரை விடமாட்டேன்" - அண்ணாமலைக்கு எதிராக பொங்கிய வைகோ.!

அந்த நிலை மாறுகிறது. ஆங்கிலேயர்கள் நமது சொத்துக்களை கொள்ளையடித்தபோது, இந்த சமுதாயமே முன்னின்று நமது உடமையை காப்பாற்றியது" என தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: "மக்கள நெனச்சா வேதனையா இருக்கு: திமுக கனவு பலிக்காது.." செல்லூர் ராஜு பேட்டி.!!