"நான் உயிருடன் இருக்கும் வரை விடமாட்டேன்" - அண்ணாமலைக்கு எதிராக பொங்கிய வைகோ.!



  MDMK Vaiko about DMK 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து புத்தாண்டு 2025ஐ முன்னிட்டு மதிமுக நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களுக்கு, தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வரவேற்கப்பட்டது.

சாட்டையடி நிகழ்வு

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ, "ஒரேநாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவில் சாத்தியம் இல்லாதது. அண்ணாமலையின் சாட்டையடி நிகழ்வு நல்ல வேடிக்கையாக இருந்தது. நான் உயிருடன் இருக்கும் வரையில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இயலாது, அதற்கு விடமாட்டேன். 

இதையும் படிங்க: "மக்கள நெனச்சா வேதனையா இருக்கு: திமுக கனவு பலிக்காது.." செல்லூர் ராஜு பேட்டி.!!

திமுகவை தோற்கடிக்க இயலாது

திமுக அரசை கவிழ்க்க முடியாது. மக்களின் மனப்பான்மை எனக்கு தெரியும். மக்களிடம் திமுக ஆட்சிக்கு ஆதரவு உள்ளது. சிறந்த திட்டங்களை தன்னம்பிக்கையுடன், தைரியமாக நிறைவேற்றுகிறார். மக்களுக்கான திட்டங்களை கவனமாக நிறைவேற்றுகிறார். ஆட்சியை நடத்துகிறார். திமுகவை தோற்கடிக்க முடியாது.

முயற்சிக்கட்டும்

நடிகர் விஜயின் அரசியல் வருகை காரணமாக, திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எம்.ஜி.ஆர்-ஐ போல வரவேற்பு அனைவர்க்கும் இருக்குமா என்பது தெரியாது? விஜய் அதனை முயற்சித்து பார்க்கிறார், பார்க்கட்டும். புதிய கட்சியை ஆரம்பிப்பது அவரவர் எண்ணம்" என பேசினார்.

இதையும் படிங்க: #Breaking: "இறுமாப்போடு கூறுகிறேன்" - விஜய்க்கு எதிராக கனிமொழி எம்.பி பாய்ச்சல்.!