குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சி.. 4 நாட்கள் மூடப்படும் டாஸ்மாக்.. ஆட்சியர் அறிவிப்பு.!



TASMAC 4 DAYS LEAVE FOR VILLUPURAM DISTRICT

வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் நடைபெறும் ஜூலை 8 முதல் 10 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

டாஸ்மாக் விடுமுறை

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெளியிட்டுள்ள உத்தரவில், "தேர்தல் நடைபெற உள்ளதால் 08.07.2024 முதல் 10.07.2024 வரையிலான தேதிகள் மற்றும் 13.07.2024 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: "சொன்ன சொல் தவற மாட்டேன்..." மந்திரி பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர் .!!

tasmac

மாரடைப்பில் இறந்த சட்டப்பேரவை உறுப்பினர் நா.புகழேந்தி

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் நா.புகழேந்தி சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாஜக, பாமக கூட்டணி சார்பில் சி.அன்புமணி மற்றும் நாதக சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

புறக்கணிக்கும் அதிமுக கூட்டணி

எனவே இந்த கட்சியை சேர்ந்தவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தின் முன்னணி கட்சியாக கருதப்படும் அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள தேமுதிக இரு கட்சிகளும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "திமுகவின் பி டீம் தான் அதிமுக..." பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!!