"சொன்ன சொல் தவற மாட்டேன்..." மந்திரி பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர் .!!



bjp-rajasthan-minster-resign-his-minister-post-after-bj

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக பெற்ற தோல்வியின் எதிரொலியாக அந்தக் கட்சியை சேர்ந்த அமைச்சர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் சட்டப்பேரவையின் அமைச்சர்

கடந்த வருடம் நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த பஜன் லால் சர்மா ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது தலைமையிலான அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த கிரோடி லால் மீனா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.

Indian politics

நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தத் தேர்தலின் போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக 14 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... பாமக - பாஜக கூட்டணியை கட்டம் கட்டும் அதிமுக.!! EPS பிறப்பித்த அதிரடி உத்தரவு.!!

பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

இந்நிலையில் பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் நான்காம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய ராஜஸ்தான் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா, தான் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாஜக தோல்வியடைந்தாலும் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியான பிறகு அவர் பிரச்சாரம் செய்ததில் 4 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து தான் கூறியபடி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கிரோடி லால் மீனா.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் பாஜக... 'களை' எடுக்கப்படும் முக்கிய தலைகள்.!! அண்ணாமலை அதிரடி.!!