திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"திமுகவின் பி டீம் தான் அதிமுக..." பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!!
தமிழகத்தில் அதிமுக கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மற்றொரு அணியாக செயல்படுகிறது என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை
திருச்சி எடைமலை புதூரில் உள்ள பாஜக நிர்வாகி இல.கண்ணன் இல்ல திருமண விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்திற்கு வந்த அண்ணாமலை மணமக்களை வாழ்த்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசியல் தொடர்புடைய பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
திமுகவின் 'பி' டீம் அதிமுக
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் அதிமுக கட்சி திமுகவின் 'பி' டீமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததில் இருந்து இந்த உண்மை உறுதியாகி இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுக கட்சியின் அழிவிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் முதல் காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: "பட்டப் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை.." நீட் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு.!!
நீட் குறித்த நடிகர் விஜய் கருத்துக்கு பதிலடி
அனைவருக்கும் பேசுவதற்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என தெரிவித்த அண்ணாமலை நீட் குறித்து நடிகர் விஜய் தகுந்த ஆதாரங்களுடன் பேச வேண்டும் என தெரிவித்தார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்ற 3 முறை தீர்மானம் நிறைவேற்றியும் வெள்ளை அறிக்கை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் கள்ளக்குறிச்சியில் நடந்தது விஷச்சாராய மரணங்கள் அல்ல அவை விஷச்சாராய படுகொலைகள் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் பாஜக... 'களை' எடுக்கப்படும் முக்கிய தலைகள்.!! அண்ணாமலை அதிரடி.!!