#Breaking: விசிக முன்னாள் மா.செ கைது., ஆரணியில் பதற்றம்.!!



  Tiruvannamalai Arani VCK Baskaran Arrested 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர் ஆவார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார். இவரின் மீது நிலம் ஒன்றை சேதப்படுத்திய வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

5 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின் கைது

நிலம் தொடர்பான பிரச்சனையில் ஒருதரப்புக்கு ஆதரவாக சென்ற பாஸ்கரன், மற்றொரு தரப்பின் நிலத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புகாரில் பாஸ்கரன், பிரியா உட்பட 5 பேரின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று விடியற்காலை பாஸ்கரனை கைது செய்ய அதிகாரிகள் சென்ற நிலையில், பாஸ்கரன் தனது வீட்டை பூட்டி தகராறு செய்தார். 

இதையும் படிங்க: அரசியலுக்கு வரும் நடிகர்களால் ரசிகர்களுக்கு கிடைத்தது என்ன? - புளூசட்டை மாறன் விளாசல்.!

tamilnadu politics

காவல்துறை குவிப்பு

:

இதனால் அங்கு 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், 5 மணிநேர போராட்டத்திற்கு பாஸ்கரனை கைது செய்தது. வீட்டை சுற்றிவளைத்து அதிகாரிகள் பாஸ்கரனை கைது செய்ததாக தெரியவருகிறது. மேலும், பாஸ்கரனின் மனைவி தனது கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கரன் காவல்துறையினரை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #Breaking: வஞ்சகத்துக்கு நன்றி! ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல - ஆளுநர் ஆர்.என் ரவி எச்சரிக்கை.!