அரசியலுக்கு வரும் நடிகர்களால் ரசிகர்களுக்கு கிடைத்தது என்ன? - புளூசட்டை மாறன் விளாசல்.!



  Blue Sattai Maran about Actors Political Entry 

இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெரும் தமிழ்நாடு அரசியல், திட்டங்கள் மற்றும் அரசின் அறிவிப்புகளை தாண்டி, எப்போதும் மாற்றத்திற்கும், சர்ச்சை விவாதங்களுக்கும் பெயர்போனது. அரசியல் விமர்சகர்களுக்கு இங்கு பஞ்சம் என்பதும் இல்லை. 

தமிழகத்தை பொறுத்தமட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாதக ஆகிய கட்சிகளுக்கு அடுப்படிதடியாக நடிகர் விஜயின் அரசியல் வருகையும் இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகம்

ஏனெனில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, தவாக, முஸ்லிம் லீக் உட்பட பல கட்சிகளும், அதிமுக கூட்டணியில் தேமுதிக உட்பட சில கட்சிகளும், பாஜக கூட்டணியில் பாமக உட்பட சில கட்சிகளும் இருக்கின்றன. நாம் தமிழர் தனித்து களம்காண்கிறது. 

இதையும் படிங்க: #Breaking: வஞ்சகத்துக்கு நன்றி! ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல - ஆளுநர் ஆர்.என் ரவி எச்சரிக்கை.!

tamilnadu politics

இதனிடையே, விஜயின் அரசியல் பிரவேசம் மதவாத, ஊழல்வாத, பிளவுவாத அரசியல் கட்சிகளுக்கு எதிரானது என விஜய் அறிவித்து இருக்கிறார். இதனால் அவர் யாருடன் கூட்டணி சேருவார்? அவரின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்? என எதிர்பார்க்கபடுகிறது.

நீலச்சட்டை மாறன் விமர்சனம்

ஆனால், நடிகர் விஜய்க்கு முன்னதாக சமீபத்தில் அரசியலில் களமிறங்கிய கமல்ஹாசன் அதிமுக, திமுக, பாஜக கட்சிகளுக்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி, இன்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்குவார் என நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்து இறுதியில் அறிவிப்பை வெளியிட்டார். 

நாங்கள் நம்பும் தலைவர்கள் அரசியலுக்கு வருவார்கள் மாற்றத்தை தருவார்கள் என சொந்த பணத்தை வாரி இறைத்து அனைவரும் வேலை செய்தனர். ஆனால், அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் ட்விட் பதிவு செய்துள்ளார். 

tamilnadu politics

கமலின் நிலைமை

இதுகுறித்து அவரின் ட்விட் பதிவில், "நம்மவர்: ஊழலை ஒழிக்க டார்ச் லைட்டுடன் வந்தார். ரிமோட்டை உடைத்தார். பிறகு பட வியாபாரத்திற்காக சிகப்பு பூதத்துடன் கை கோர்த்தார். கடைசியில் சூரியனுடன் ஐக்கியமாகி.. இப்போது ராஜ்யசபா சீட்டுக்காக காத்திருக்கிறார்.

தலீவர்: சிஸ்டம் சரியில்லை. ஆன்மீக அரசியல் மூலம் தமிழகத்தை மீட்பேன் என்று துள்ளினார். பிறகுயூடர்ன் அடித்து பழையபடி ஷூட்டிங் சென்றுவிட்டார். தற்போது தமிழக அரசியலின் கிங் மேக்கராக தன்னை உணர்ந்து.. கொல்லைப்புற அரசியல் செய்கிறார். 2026 தேர்தலில் தாமரைக்கு மறைமுகமாக உதவுவார்.

சீமான் தற்போதைய கலவரம்

சங்கிமான்: தமிழ்ப்பற்று முகமூடியை அணிந்து கொண்டு அக்மார்க் B டீம் அவதாரம் எடுத்துள்ளார். எப்போதோ எடுத்தும் விட்டார். சில வருடங்கள் கழித்து.. பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்.பி. ஆகலாம் அல்லது அக்கட்சியின் மாநிலத்தலைவராக கூட ஆகலாம்.

tamilnadu politics

சுறா: வந்தா மலை. போனா முடி என களத்திற்கு வந்துள்ளார். ஜெயித்தால் சி.எம். தோற்றால் மறுபடியும் உறுதியாக ஷூட்டிங் போய் விடுவார். தற்போதைக்கு லேசாக காவிச்சாய வாடை வருகிறது. ஆக மொத்தத்தில்.. இவர்கள் அனைவருமே செமத்தியாக செட்டில் ஆகத்தான் இத்தனை நாடகங்களும். 

இவர்களை நம்பி நேரம், பணம், எதிர்காலத்தை இழக்கும் ரசிகர்கள் தொண்டர்களுக்கு பட்டை நாமம் உறுதி. சந்தேகம் இருந்தால் நம்மவர் மற்றும் தலீலரின் பக்தர்களுக்கு நேர்ந்த கதியை யோசித்து பாருங்கள். இவர்கள்..திமுக, அதிமுகவை ஒழித்து.. நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என நம்பும் அப்பாவி மக்களுக்கு கிடைக்கப்போவது.. இருட்டுக்கடை அல்வாதான்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெரியாருக்கு எதிராக புலம்பும் சீமானுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; பரிதாபமா இருக்கு.! சத்யராஜ் கலாய்.!!