கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: எவ்வுளவு நாள் தான் ஏமாத்துவீங்க? திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்.!
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, ஆளும் திமுக அரசு, நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இன்று வரை நீட் ரத்து செய்யப்படவில்லை. இதுதொடர்பான விவாதங்கள் 2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வினாக்களாக எழுப்பப்பட்டு வந்தது. இதற்கு பதிலளித்த அரசு, நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என தெரிவித்து இருந்தனர்.
மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம்
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவு செய்துள்ள ட்விட் பதிவில், "எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
இதையும் படிங்க: #JustIN: திமுக போராட்டத்திற்கு அனுமதி எப்படி கொடுக்கப்பட்டது? - நீதிமன்றத்தில் பாமக முறையீடு.!
மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை" என தெரிவித்துள்ளார்.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
— TVK Vijay (@tvkvijayhq) January 11, 2025
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை…
இதையும் படிங்க: #Breaking: ஆளுநருக்கும் - விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? - கனிமொழி கடும் தாக்கு.!