#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
#Breaking: நீ நாசமா போவ, என் கண்ணீர் உன்னை சும்மா விடாது - நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு குமுறல்.!

தன் மீது குற்றச்சாட்டு முன்வைத்த நடிகையை, சீமான் பாலியல் தொழிலாளி என விமர்சித்து பேசியதால், ஆவேசமான நடிகை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமண மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி கடந்த 14 ஆண்டுகளாக குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறார். கடந்த 2021 ம் ஆண்டுக்கு பின்னர் சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்த விஜயலட்சுமியின் கோரிக்கையின்போரில், 2025ல் தற்போது நீதிமன்றம் தலையிட்டு வழக்கு விசாரணையை வரும் மே / ஜூன் மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் சீமானிடம் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயலட்சுமியின் வாக்குமூலமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமாவளவனும் இப்படியா? ஹிந்தி திணிப்பு விஷயத்தில் இரட்டை வேடம்? அண்ணாமலை குற்றச்சாட்டு.!
பாலியல் தொழிலாளி
இந்நிலையில், சென்னையில் உள்ள விமான நிலையத்தில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "என் மீது அவதூறு கூறிவரும் பெண் ஒரு பாலியல் தொழிலாளி. நான் எந்த தவறும் செய்யவில்லை. விசாரணை நடந்து வருகிறது. இனியும் இதுகுறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மக்கள் பிரச்சனை பல இருக்கிறது" என பேசினார்.
கண்ணீருக்கு பதில் சொல்வாய்
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து உச்சக்கட்ட மனவேதனை அடைந்த நடிகை விஜயலட்சுமி, கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நான் பாலியல் தொழிலாளியா? பாலியல் தொழிலாளியாடா? இதுநாள் வரை நீ தப்பித்துவிட்டாய். இனி என்ன செருப்படி வாங்க போகிறாய் பார்.. நீ நாசமாக போவாய். எனது கண்ணீர் உன்னை என்ன செய்யப்போகிறது பார். அதை நீ பார்ப்பாய்" என கூறியுள்ளார்.
காமக்கொடூரன் பொம்பள பொறுக்கி சீமானை வன்மையாக கண்டித்து ேவத னை வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி@Senthilvel79 @Seeman4TN @pasumponpandia pic.twitter.com/QPc1U5ni1L
— Thavam (@ThavamOfficial) March 2, 2025
இதையும் படிங்க: #Breaking: தோல்வியடைந்த திமுக.. அன்பில் மகேஷுக்கு அமைச்சர் பொறுப்பு தேவையா? - அண்ணாமலை காட்டம்.!