#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
#Breaking: கனிமவளக்கொள்ளையை எதிர்த்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; களமிறங்குகிறது சிபிசிஐடி.. அதிரடி உத்தரவு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், அதிமுக ஒன்றிய பொறுப்பாளர் ஜகவர் அலி, நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சமூக ஆர்வலரான அலி, குவாரிக்கு எதிராக வழக்குத்தொடுத்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்து, அதிகாரிகளால் குவாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கண்டனக்குரல்
விசாரணையில் ஜவஹர் அலி கல்குவாரி முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வந்ததால், குவாரி உரிமையாளர்கள் ராசு, அவரின் மகன், லாரி ஓட்டுநர் ஆகியோரை திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், உரிய நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் கண்டனக்குரல் எழுப்பின.
இதையும் படிங்க: சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டது எப்படி? இரண்டு முறை துள்ளத்துடிக்க ஏற்றி பயங்கரம்.. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்..!
சிபிசிஐடி விசாரணை
இந்நிலையில், ஜெகபர் அலியின் கொலை வழக்கு விவகாரம், சிபிசிஐடி விசாரணை செய்ய தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டு இருக்கிறார். பிற அறிவிப்புகளில் விசாரணை அதிகாரி நியமனம் தொடர்பான தகவல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கில் தலைமறைவாக இருக்கும் ராமையா தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: #Breaking: அதிமுக முக்கியப்புள்ளி அமைச்சர் முன்பு திமுகவில் இணைவு.. ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்.!