சிவகங்கை: பள்ளியில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் மரணம்; தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடைநீக்கம்.!



Sivagangai Karaikudi Student Dies Electrocution 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, பொய்யாவயல் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம். இவரின் மகன் சக்தி சோமையா (வயது 14). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுவன், கணினியை இயக்க பிளாக் பாயிண்டில் கைவைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதி செய்தபோது மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த முதல்வர், தனது இரங்கலை பதிவு செய்தார். மேலும், குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிதிஉதவி அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

உறவினர்கள் போராட்டம்

இதனிடையே, சிறுவனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், சிறுவனின் குடும்பத்தில் பெண் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு, எங்களுக்கு ரூ.5 இலட்சம் இழப்பீடு முறையானது அல்ல, கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வேண்டும் என குரல் உயர்த்தினர். மாவட்ட ஆட்சியரும் அரசு வேலை தருவதாக உறுதி அளித்தார். 

இதையும் படிங்க: ஒருதலை காதலிக்கு ஸ்கெட்ச் போட்ட இளைஞன்; கத்தி, கூட்டாளிகளுடன் அதிரடி கைது.. தப்பிய புதுமணஜோடி.!

Student Dies

ஆசிரியர், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர், அதன்படி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பணி ஆணை உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன், ஆசிரியர் பாண்டி முருகன் ஆகியோரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: இருவீட்டார் தகராறில் முதியவர் வெட்டிக்கொலை; சிவகங்கையில் பயங்கரம்.!