#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி திடீர் கைது; வெளியான பரபரப்பு தகவல்.!
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடிக் கொண்டு இருப்பவர் முகமது சமி. தற்போது ஐபிஎல் 12வது சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இவர் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முகமது சமிக்கும் ஹசின் ஜகான் என்பவருக்கும் திருமணமாகி அவர்களது வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருந்தது. திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் விவகாரத்து கோரி இருவரும் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஷமியின் வீட்டிற்குள் மகள் பெபோ உடன் நுழைந்த ஹசின் ஜகான் முகமது ஷமியின் அம்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமியின் தாயார் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் ஹசின் ஜகான் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்குமிடையே பிரச்னை நிழவும் நிலையில், ஷமியின் வீட்டியில் நுழையக் கூடாது என ஹசின் ஜகானை தடுத்தும் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.