டாஸ் வென்ற நியூசிலாந்து! பந்துவீச்சை தேர்வு செய்து, முதல் ஓவரிலே இந்திய ரசிகர்களுக்கு ஷாக்!



New zealand won the toss and choose the bowling

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். இந்தநிலையில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக பிரிதிவி ஷா மற்றும் மயங் அகர்வால் களமிறங்கியுள்ளனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 5 - 0 என்று வென்றது. அதனை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

India vs new

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்நது இன்று இந்திய நேரப்படி காலை 7:30 மணியளவில் துவங்கியது. ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நியூசிலாந்தின் நேரப்படி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். இந்தநிலையில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக பிரிதிவி ஷா மற்றும் மயங் அகர்வால் களமிறங்கியுள்ளனர். இந்திய அணியின் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் இளம் வீரர் மயங் அகர்வால் களமிறங்கியுள்ளார். நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 5 டி20 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், இந்த ஒருநாள் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பந்துவீச்சை தொடங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தின் துவக்க ஓவரினை வீசிய செளத்தி, மிகவும் அருமையாக வீசி முதல் ஓவரை மெய்டன் ஓவர் ஆக்கி. இந்திய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஆனாலும் இந்திய அணியின் துவக்க வீரர்கள் நிதானமாக களத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டு வருகின்றனர்.