வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
நல்ல மனசு வாட்சன் உங்களுக்கு!! சிஎஸ்கே அணியில் இருந்து போனதுக்கு அப்புறமும் அணி மேல எவ்வளவு அக்கறை.!! நெகிழும் ரசிகர்கள்..
சென்னை அணியை வாழ்த்தி முன்னாள் சென்னை அணி வீரர் வாட்சன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
சென்னை அணியில் விளையாடி மிக சிறந்த வீரர்களில் வாட்சனும் ஒருவர். சென்னை அணி பல போட்டிகளில் வெற்றிபெற வாட்சன் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அணி, ஐபிஎல் கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாகவும் வாட்சன் இருந்தார்.
2019 ஆம் ஆண்டிலும் வாட்சன் ஐபில் இறுதி போட்டியில் சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். சென்னை அணிக்காக கடந்த 2020 ஆம் ஆண்டில் விளையாடிய வாட்சன் தற்போது ஐபில் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சென்னை அணியில் இருந்து வெளியேறியிருந்தாலும் கூட, தனது அணி வெற்றி பெறவேண்டும் என வாட்சன் வாழ்த்தியுள்ளார்.
சென்னை அணியின் கேப்டன் தோனியுடனும், வேறுசில வீரர்களுடன் உள்ள சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, "சிஎஸ்கேவின் முதல் போட்டிக்கு வாழ்த்துக்கள். இந்த சீசனில் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
அணியில் இருந்து வெளியேறிய பிறகும், தனது முந்திய அணி வெற்றிபெறவேண்டும் என வாழ்த்திய வாட்சனின் நல்ல மனதை சென்னை அணி ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.