சர்வதேச அளவிலான கேரம் போட்டியில்., 3 தங்கம் வென்ற தமிழக வீராங்கனை.. அசத்தல் வெற்றி.! குவியும் வாழ்த்துக்கள்.!



World Carrom Championship 2024 Kasima Victory with 3 Gold Medals 


6வது சர்வதேச அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் 2024 (World Carrom Championship) போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அளவில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியான ஆட்டோ ஓட்டுனரின் மகள் காசிமா கலந்துகொண்டார். 

இவர் அங்கு நடந்த பல சுற்றுகளில் திறம்பட விளையாடிய நிலையில், தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு பிரிவுகளில் 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டின் தங்க மகளாக சிறுமி காசிமா வெற்றிகண்டு இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

காசிமா ஒற்றையர் பிரிவில் விளையாடிய காட்சி

இதையும் படிங்க: IND Vs NZ: இந்திய கிரிக்கெட் அணியின் படுதோல்வி; மனம் திறந்த ரோஹித் சர்மா.!

தமிழ்நாடு சார்பில் கேரம் போட்டியில் நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகியோரும் பங்கேற்ற நிலையில், காசிமா தங்கம் வென்றுள்ளார். விளையாட்டு வீரர்களின் பயண செலவுக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ரூ.1.5 இலட்சம் பணம், பயண உதவித்தொகையாகவும் கடந்த ஜூலை மாதம் வழங்கப்படும் இருந்தது.

தங்கப்பதக்கம் வென்ற தங்கமகளின் வெற்றிக்கு தமிழ்நாடு துணை முதல்வர் & விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

வரும் நவ.21 அன்று அவர் சென்னை வருகிறார். காசிமா இந்திய அளவில் பலமுறையும் (18), சர்வதேச அளவில் 3 முறையும் வெற்றிகண்ட ரேஷ்மாவை தோற்கடித்து வெற்றியை தனதாக்கி இருக்கிறார். 

எளியோரின் வெற்றியே 'திராவிட மாடல்' - முதல்வர் பாராட்டு 

இதையும் படிங்க: 91 ஆண்டுகளில் இல்லாத, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தோல்வி; ரோஹித்தை விளாசும் நெட்டிசன்கள்.!