#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
IND Vs NZ: இந்திய கிரிக்கெட் அணியின் படுதோல்வி; மனம் திறந்த ரோஹித் சர்மா.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து இறுதி டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணி அபார வெற்றி அடைந்தது. முதல் இரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி அடைந்த நிலையில், இறுதிப்போட்டியாலாவது இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
91 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி சொந்த மண்ணில் வாஷ் அவுட் ஆகியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கின்றனர். ரோஹித், விராட் போன்ற மூத்த வீரர்களின் மீது அவர்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்த நிலையில், நியூசிலாந்து - இந்தியா தொடரில் இந்திய அணியின் படுதோல்வி அடைந்தது மிகப்பெரிய தாக்கத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 91 ஆண்டுகளில் இல்லாத, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தோல்வி; ரோஹித்தை விளாசும் நெட்டிசன்கள்.!
ரோஹித் சர்மா விளக்கம்
அணியின் மூத்த வீரர்களான ரோஹித், கோலி மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், ரோஹித் சர்மா தோல்வி குறித்து கூறுகையில், "இந்திய அணியின் தோல்வி ஏமாற்றமாக உள்ளது. டெஸ்ட் தொடரில் தோல்வி என்ற விஷயத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. நாங்கள் எங்களின் விளையாட்டை சிறப்பாக விளையாடவில்லை. பல இடங்களில் தவறுகள் செய்துள்ளோம். இந்த விஷயத்தை நாங்கள் கட்டாயம் ஒப்புக்கொண்டாகவேண்டும். மனதில் பல திட்டங்கள் இருந்தும், அவை எடுபடாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்" என பேசினார்.
இதையும் படிங்க: 91 ஆண்டுகளில் இல்லாத, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தோல்வி; ரோஹித்தை விளாசும் நெட்டிசன்கள்.!