91 ஆண்டுகளில் இல்லாத, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தோல்வி; ரோஹித்தை விளாசும் நெட்டிசன்கள்.!



IND Vs NZ Test 2024 India Washout 


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, பெங்களூர், புனே, வான்கடே ஆகிய மைதானங்களில் தலா 1 டெஸ்ட் போட்டி வீதம், இந்திய கிரிக்கெட் அணியுடன் மோதியது. இதில் மூன்று ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி வெற்றியடைந்து, இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் 2024 கோப்பையை தட்டிச் சென்றுள்ளது. இதன் வாயிலாக இந்திய அணி சொந்த மண்ணில் வைட் வாஷ் ஆகி இருக்கிறது. 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை தலைமையேற்று வழிநடத்தி வந்த கேப்டன் ரோஹித், மூத்த வீரர் விராட் கோலி என இருவரும் மூன்று ஆட்டத்திலும் தங்களின் ஆட்டத்தை சரிவர வெளிப்படுத்தவில்லை. அதேநேரத்தில், முக்கிய தலைகளின் விக்கெட் கவிழ்ந்ததால், பிற அணியும் மைதானத்தின் பரபரப்பை எதிர்கொண்டு விக்கெட்டை இழந்து தோல்விக்கு வழிவகை செய்தது. 

டி20 போட்டிகளில் இருந்து முன்னதாக ரோஹித் விலகியிருந்த நிலையில், அவர் உண்மையில் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியிருந்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த டி20 போட்டியில் இந்திய அணி இறுதியாக சொந்த மண்ணில் வாஷ் அவுட் ஆகிய நிலையில், தற்போது 24 ஆண்டுகள் கழித்து இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 

இதையும் படிங்க: டிஎஸ்பி முகமது சிராஜ்; காவல் அதிகாரியாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் நாயகன்.!

ind vs nz

ஒரு அணியின் வெற்றிக்கு பின்னர் கேப்டன்களை கொண்டாடுவதைப்போல, தோல்விக்கு பின் கேப்டனை தூற்றுவது சரியானது இல்லை எனினும், கேப்டன்கள் தங்களின் பொறுப்பு உணர்ந்து அடுத்த போட்டியில் செயல்பட்டு, அணியை அதற்காக தயார் செய்வதே மீண்டும் இப்படியான தோல்வி ஒன்றுக்கு வழிவகை செய்யாமல் இருக்கும் என்பதே சாதாரண கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியுற்றாலும், கிரிக்கெட் ரசிகர்களாக நியூசிலாந்தை பாராட்டாமல் இருக்க முடியாது எனினும், மனதைரியத்திற்கு பெயர்போன இந்திய அணி, எதிரணிகளின் செயல்பாடுகளை மட்டுமே கவனித்து தோல்வியை தழுவி இருக்கிறது என்பதே நிதர்சனம். 

இந்த படுதோல்வி 91 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத ஒரு மிகப்பெரிய தோல்வியை இந்திய அணி வெளிப்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: டிஎஸ்பி முகமது சிராஜ்; காவல் அதிகாரியாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் நாயகன்.!