#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆடி வெள்ளியில் மகாலட்சுமியை இப்படி வழிபட்டு வந்தால் கஷ்டங்கள் நீங்கி பணவரவு பெருகும்.!?
ஆடி வெள்ளியில் செய்ய வேண்டியவை
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு மாதமும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் மங்களகரமான கிழமைகளாவே கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருந்து வருகிறது. ஆடி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வழிபட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
மகாலட்சுமியை எவ்வாறு வழிபட வேண்டும் ?
நம் வாழ்வில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தரும் மகாலட்சுமியை ஆடி வெள்ளி அன்று வழிபட்டு வருவது குடும்பத்தில் மகிழ்ச்சியை பெருக்கும். ஆடி வெள்ளிக்கு முந்தைய நாளே வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும். ஆடி வெள்ளி அன்று அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்யவும். பின்னர் மகாலட்சுமி படத்திற்கு பூக்களினால் அலங்கரித்து விளக்கேற்றி மனதார வழிபட வேண்டும்.
இதையும் படிங்க: இந்த தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன் தெரியுமா.!?
வீட்டில் பூஜை செய்தவுடன் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால் நினைத்த வரம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும், இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை நீங்கி பணவரவு பெருகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும்.
வீட்டில்
பண வரவு பெருகும் பரிகாரம்ஒரு மஞ்சள் துணியில் சிறு துண்டு வசம்பு, கல் உப்பு, இரண்டு மிளகு எடுத்து முடிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் துணியில் முடிந்து வைத்த பொருட்களின் மீது கற்பூரம் ஏற்றி வைக்கவும். இந்த புகை வீடு முழுவதும் பரவ வேண்டும். இவ்வாறு ஆடி வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் வீட்டில் நன்மைகள் பெருகி மகிழ்ச்சி உண்டாகும்.
இதையும் படிங்க: சூரிய பகவானின் இடப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது தெரியுமா.!?