மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோபியில் அதிர்ச்சி... 15 வயது சிறுமி கர்ப்பம்.!! 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது.!!
கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 17 வயது சிறுவனை கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 6 மாத கர்ப்பமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளானர்.
தொடர் பலாத்காரத்தால் கர்ப்பம்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னை காதலிப்பதாக கூறி வீட்டில் ஆளில்லாத நேரத்தில் தொடர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையும் படிங்க: "உடம்பெல்லாம் எரியுது காப்பாத்துங்க.." கட்டி அனைத்தபடி கதறிய பெண்.!! கணவன் வெறி செயல்.!!
போக்சோ வழக்கில் கைது
இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்த போது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான். இதனைத் தொடர்ந்து சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "வீட்டுக்கு வா வேலை வாங்கி தரேன்.." இளம் பெண் மீது பாலாத்கார முயற்சி.!! பேராசிரியர் கைது.!!